Mnadu News

புதுச்சேரியில் தலைக்கவசம் கட்டாயம்: நாளை முதல் அமல்.

புதுச்சேரியில் காவல் அதிகாரிகள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர், ஐஆர்பிஎன் காவலர்கள் என அனைவரும் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். இருச்சக்கர வாகனங்களில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயணம் செய்யும்போது இரண்டு பேருமே தலைக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும்.
4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், அதில் பயணிப்பவர்களும் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
தலைக்கவசம் அணியாதவர்களிடம் நேரடியாக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி, முதல் முறை பிடிபட்டால் ஆயிரம் ரூபாய அபராதம் விதிக்கப்படும். 2-ஆவது முறை தவறு செய்தால் மூன்று மாதங்களுக்கு ஓட்டு உரிமத்தை முடக்கி வைக்கலாம் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலைகளில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். இருச்சக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் அத்துடன் தரமான தலைகவசமும் விற்பனை செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More