Mnadu News

புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை தினம் அனுசரிப்பு

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தர் வல்லபாய்படேல் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில் தேசிய ஒற்றுமை தினம் கடற்கரை காந்தி திடலில் அனுசரிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேல் திருவுருவ படத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை துணைநிலை ஆளுநர் வாசிக்க அனைவரும் ஏற்றனர். அதன் தொடர்ச்சியாக மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், பங்கேற்ற ஒற்றுமை தின பேரணியையும் துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More