வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து லேசான மழை பெய்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதிகளில் காய்கறி, பழங்கள், பூக்கள் ஆகியவைகளின் விற்பனை வெகு மந்தமாகியது. குறிப்பாக நேற்று தொடர்ந்து பெய்த மழை காரணமாக பூக்கள் விற்பனை மந்தமாகியதோடு சுமார் 100 கிலோ சாமந்தி பூக்கள் வீணாகியது. இதனை பூ வியாபாரிகள் மார்க்கெட் முன்புள்ள குப்பை தொட்டியில் கொட்டி சென்றனர். இதனை சுகாதார பணியாளர்கள் அள்ளி சென்ற அவலம் புதுவையில் நடைபெற்றது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More