Mnadu News

புதுச்சேரியில் மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு வருகின்ற டிசம்பர் மூன்றாம் தேதி மாற்று திறனாளிகள் தின விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends