Mnadu News

புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு..!

புதுச்சேரி வழக்கறிஞர் சங்கம் சார்பில் சட்டத்துறை செயலர் மற்றும் மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தின் நீதிபதி ஆகியோரை உடனே மாற்ற வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இதனால் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் வழக்குகளில் ஆஜராகாமல் வழக்கறிஞர்கள் அறையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் புதுவை மாநில வழக்கறிஞர்களுக்கு தொடர்ந்து எதிராக செயல்பட்டு வரும் புதுவை மாநில அரசின் சட்டத்துறை செயலாளர் மீது புதுவை அரசு உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுத்து, சட்டத்துறை செயலரை பணிமாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டது.

Share this post with your friends