புதுவை திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வெள்ளிக் கிழமைகளில் இரண்டு மணி நேரம் வேலைக் குறைப்பு செய்யப்படுவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல் அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் அறிவிப்பு செய்துள்ளது பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாக நாங்கள் கருதுகிறோம். நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அரசியல் சித்தாந்தங்களை அரசு ஊழியர்கள் வழியாக மக்களிடம் புகுத்த முற்பட்டால் அதை திமுக வேடிக்கை பார்க்காது என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சிவா கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More