Mnadu News

புதுச்சேரி எல்லைப்பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

புதுச்சேரி எல்லைப்பகுதியான முள்ளோடை- குருவிநத்தம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகேயுள்ள மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சந்தேகமடைந்த போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை செய்து, அவரது வாகனத்தை சோதனையிட்டபோது, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ, கஞ்சா எடைமெஷின் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் ( 23 ) என்பதும், சென்னையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Share this post with your friends