நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வேட்பாளர் யார் என்பதை பாஜக விரைவில் அறிவிக்கும் என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக கூட்டணி அமைப்பதில் பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மக்களவை தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முதலமைச்சருமான ரங்கசாமி அறிவித்துள்ளார். வேட்பாளர் யார் என்பதை பாஜக விரைவில் அறிவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.