Mnadu News

புதுப்பிக்கப்பட்ட பூங்காவில் காணாமல் போன 1000 மரங்கள்:நிழலுக்காக ஏங்கும் பொதுமக்கள்.

சென்னை ஷெனாய் நகரில் அமைந்திருந்த மிகப்பெரிய பூங்காவில் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரலில் திறக்கப்பட்டது.இந்த புதுப்பிக்கப்பட்ட பூங்கா குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், பூங்காவில் தற்போது நன்கு வளர்ந்த மொத்தம் 2 ஆயிரத்து 400 மரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,தனியார் தினசரி நாளிதழின் செய்தி குழு கள ஆய்வு நடத்தியதில் பூங்காவில் கிட்டத்தட்ட ஆயிரத்து 200 மரங்களுக்கும் குறைவாகவே இருந்தது. இந்த பூங்காவில் மியாவாக்கி காடுகள் முறையில் நடப்பட்டிருக்கும் செடிகளும் கூட, பூங்காவுக்கு வருவோருக்கோ, நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கோ நிழல்தரும் வகையிலோ அல்லது அளவிலோ வளரவில்லை என்பதை கண்டறிந்துள்ளது.அதோடு, பூங்கா திறக்கப்பட்டதும் ஆவலோடு நடைப்பயிற்சி மேற்கொள்ள வந்த பொதுமக்களுக்கு, இதில் போதிய மரங்கள் இல்லாததும், காலை 8 மணிக்கே வெயில் சுட்டெரிப்பதால், இங்கு நடைப்பயிற்சி செய்வது என்பது சவாலானதாக மாறியதாகவும் கூறி உள்ளனர்.

Share this post with your friends