Mnadu News

புதுமைப் பெண் 2 வது திட்டத்தை முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார் .

இரண்டாம் கட்ட “புதுமைப் பெண்” திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை முதல் அமைச்சர்; மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் தொடங்கி வைத்தார்.

இந்த தொடக்க விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர், சமூக நலத்துறை இயக்குநர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share this post with your friends

நான் மன்னிப்பு கேட்க சர்வார்கர் அல்ல: ராகுல் காந்தி ஆவேசம்.

டெல்லியின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல்...

Read More