புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று விடுதலைத் திருநாள் விழாவில் முதல் அமைச்சர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ள அவர்,புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஆயிரத்து 56 பணியிடங்களை முதற்கட்டமாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு அந்தந்தத் துறை சார்பில் நாளை வெளியிடப்படும்.
மீதமுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் வரும் காலங்களில் தொடரும். புதுச்சேரி மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு 2020-21ஆம் ஆண்டில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.
2021-22ஆம் ஆண்டில் சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. நடப்பு நிதியாண்டில் சுமார் 39 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டுகளாக தனிநபர் வருமானமும் உயர்ந்துள்ளது என்றார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More