Mnadu News

புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை

புதுவை தொகுதி வாக்கு எண்ணிக்கை புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய இடங்களில் நடந்தது. ஆரம்பத்தில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலையில் இருந்தார்.முதல் சுற்றில் 69 ஆயிரத்து 421 ஓட்டுகள் எண்ணப்பட்டு இருந்தன. அதில், வைத்திலிங்கம் 41 ஆயிரத்து 132 ஓட்டுகளும், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி 20 ஆயிரத்து 959 ஓட்டுகளும் பெற்றிருந்தனர்.இதன் மூலம் வைத்திலிங்கம் 20 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார்.

Share this post with your friends