புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த பேசியுள்ள முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி,மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியில் வளர்ச்சி திட்டங்கள் விரைவாக நடந்தன. ஆளுநர்கள் ஆளும் அரசுக்கு ஒத்துழைப்பு தந்தனர். நிர்வாக சீர்கேடு பற்றி முதல்வர் ரங்கசாமி எங்களை குற்றம்சாட்டுகிறார். விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் காங்கிரஸ் அரசு செயல்பட்டது. புதுச்சேரியில் முதல் அமைச்சருக்கு பதிலாக ஆளுநர் தமிழிசைதான் சூப்பர் முதல் அமைச்சராக உள்ளார். அரசு திட்டத்தை முதல் அமைச்சர் தான் அறிவிக்கவேண்டும்.ஆனால், ரங்கசாமி ஏமாளி. முதல் அமைச்சரின்; அதிகாரத்தை ஆளுநர் கையில் எடுத்து அவரை செயல்படவிடாமல் இருக்கிறார்.ஆளுநர் தமிழிசை செயல்பாடு விளம்பர அரசியலாக உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More