மகாராஷ்ர மாநிலம் புனேவின் வாகோலி பகுதியில் ஒரு அலங்காரப் பொருட்கள் கிடங்கு உள்ளது. வழக்கம் போல கிடங்கை பூட்டி விட்டு பணியாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் திடீர் என்று கிடங்கிலிருந்து புகை கிளம்பியது. அதையடுத்து, தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. உடனடியாக,அக்கம் பக்கத்தில் வசிப்போர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தந்தனர். அதையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து பிறகு முழுமையாக அணைத்தனர்.இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமான உயிரிழந்தனர்.இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இத் தீயால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அலங்கார பொருட்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More