ஒடிசா மாநிலத் தலைநகரின் புவனேஸ்வரிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் புரி ஜெகந்நாதர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் ஜெகந்நாதருக்கு கோலாகலமாக யாத்திரை நிகழ்த்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான ரத யாத்திரை ஜூன் 20-ஆம் தொடங்கவுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரத யாத்திரை நடைபெறும் நாளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து புரி போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். இந்த தடை உத்தரவு ஜூலை 1-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டப்பாட்டை மீறி ட்ரோன்கள் இயக்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More