புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை நடத்திய பின் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஜிபி சைலேந்திரபாபு,புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பதற்றம் தணிந்துள்ளது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களை வைத்து பதற்றத்தை ஏன் ஏற்படுத்துகிறார்கள் என்று விசாரித்து வருகிறோம். புலம்பெயர் தொழிலார்கள் குறித்து தவறான தகவல் பரப்பியதாக 11 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடவே சொந்த ஊர் சென்றனர். தமிழ்நாட்டில் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கலாம் என தகவல். புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர்களை பிடிக்க டெல்லி, பீகார், மத்திய பிரதேசத்தில் தனிப்படை முகம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். என்று அவர் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...
Read More