2021 ஆம் ஆண்டு இறுதியில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, சுனில், அஜய் கோஷ்,ஃபாகாத் பாசில் ஆகியோர் முக்கிய ரோல்களில் தெறிக்க விட்டு பிளாக் பஸ்டர் வசூல் குவித்த படம் “புஷ்பா – தி ரைஸ்”.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வசூல் வேட்டை நடத்தி சாதனை புரிந்தது இப்படம். தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
குறிப்பாக ஶ்ரீவள்ளி, ஊன் சொல்றியா பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் படத்தை பிரபலமாக்கின. அல்லு அர்ஜுன் மற்றும்
ராஷ்மிகா ஆகியோர் கலை வாழ்வில் உயரத்தை தந்த படம் இதுவே.
தற்போது இப்படம் ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு வரும் டிசம்பர் 8 அன்று வெளியாக உள்ளது. இதன் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
டிரெய்லர் லிங்க் : https://youtu.be/PLvfXBSoUr4