கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,பெங்களூருவில் பிரதமர் மோடி 26 கிலோ மீட்டர் தூரம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, குண்டு துளைக்காத திறந்தவெளி வேனில் நின்றபடி சாலையின் இருபுறத்திலும் குவிந்திருந்த பா.ஜ.க தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அந்த கார் காவி நிறத்தில் இருந்தது. அதில் மோடியின் புகைப்படம் மற்றும் பா.ஜனதாவின் சின்னம் அச்சிடப்பட்டு இருந்தது. இந்த பேரணியின் போது மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி மற்றும் கலாசார கலைஞர்களின் இசை நிகழ்ச்சி,நடைபெற்றது.அப்போது, ஹனுமன் போன்ற வேடங்களில் வந்து பேரணியில் பலர் பங்கேற்றனர்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More