முதன் முதலாக கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி ஆகாசா ஏர் விமான நிறுவனம் செயல்படத் தொடங்கியது. இந்த நிறுவனம் நவம்பர் இறுதிக்குள் சுமார் 58 தினசரி விமானங்களையும், 400 வாராந்திர விமானங்களையும் இயக்கும்; என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்துவரும் தேவை காரணமாக, வரும் 23 ஆம் தேதி பெங்களூரு மற்றும் புனே இடையேயான முதல் சேவையையும் அதையடுத்து 26- ஆம் தேதி இரண்டாவது சேவையையும் தொடங்க உள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை, அகமதாபாத், டெல்லி, சென்னை, கொச்சி, குவஹாத்தி மற்றும் புணே ஆகிய ஏழு நகரங்களை இணைக்கும் வகையில் பெங்களூருவிலிருந்து தினசரி 20 விமானங்களை ஆகாசா ஏர் நிறுவனம் தற்போது இயக்கி வருகிறது.
புனே மற்றும் பெங்களூரு ஆகிய இரு இடங்களிலும் தகவல் தொழில்நுட்ப மையங்கள் அதிகம் செயல்பட்டு வருவதால், மலிவு கட்டணத்துடன் இந்த விமான சேவை வழங்கப்படுவதாக ஆகாச ஏர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை வணிக அதிகாரி பிரவீன் ஐயர் கூறி உள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More