Mnadu News

பெங்களூரு விமானநிலையத்தை சுற்றி; இறைச்சி விற்க தடை: ஏரோ இந்தியா கண்காட்சியையொட்டி நடவடிக்கை.

பெங்களூருவில் உள்ள யலஹங்கா விமானநிலையத்தில் அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 14 வது “ஏரோ இந்தியா 2023” கண்காட்சி நடைபெற இருக்கிறது. இதனால், விமானநிலையத்தைச் சுற்றி 10 கி.மீ., தூரத்திற்கு இறைச்சி கடைகளை மூடவேண்டும் என்று பெங்களூரு உள்ளாட்சி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பிபிஎம்பி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வரும் ஜன. 30 முதல் பிப். 20 வரை யலஹங்கா விமானநிலையதையெட்டி 10 கிமீ சுற்றளவிற்கு அனைத்து இறைச்சி, கோழி, மீன் கடைகளை திறக்கவும் அசைவ உணவகங்கள், ரெஸ்டாரண்ட்களின் அசைவ உணவு பரிமாறவும் விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்படுதிறது என்று பொதுமக்கள், இறைச்சிக்கடை உரிமையாளர்கள், அசைவ உணவுவிடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.இந்த உத்தரவினை மீறுவர்கள் மீது பிபிஎம்பி சட்டம் 2020, இந்திய வினமானச்சட்டம் 1937 பிரிவு 91 ன் கீழ் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends