Mnadu News

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து நிலையாக இருக்கும் பட்சத்தில், பெட்ரோல்-டீசல் விலையைக் குறைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் ஆலோசிக்க வாய்ப்புள்ளது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.அப்போது, 400 நாள்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாத நிலையில் விலை குறைக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், விரைவில் விலை குறைப்பிற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends