Mnadu News

பெண்கள் குட்டை ஆடைகளை அணிய கூடாது: தெலுங்கானா அமைச்சர் பேச்சு.

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில் தேர்வெழுத சென்ற மாணவிகள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது. அவர்கள் அரை மணிநேரம் காத்திருந்து பின்னர், புர்காவை அகற்றிய பின்னரே தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்து பேசியுள்ள தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலி , பெண்கள் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு தங்களை ஆடைகளை கொண்டு மூடி, மறைத்து கொள்ள வேண்டும். பெண்கள் குட்டை ஆடைகளை அணியும்போது அதனால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நம்முடைய கொள்கை முழுவதும் மதசார்பற்ற ஒரு கொள்கை. ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் ஆடைகளை அணிவதற்கான உரிமை உள்ளது. ஆனால், ஒருவர் இந்து அல்லது இஸ்லாமிய வழக்கத்தின்படி ஆடைகளை அணிய பழகி கொள்ள வேண்டும். ஐரோப்பிய கலாசார ஆடைகளை பின்பற்ற கூடாது.நம்முடைய ஆடை கலாசாரங்களை நாம் மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends