Mnadu News

 “பெண்கள் முன்னேற்றத்தில் தமிழகம் முன்னிலை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜவுளி, மின்னணு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

தமிழகம் முழுவதும் தொழில்களை துவங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை விரிவுபடுத்தி உள்ளன. இதுவே தமிழகத்தில் தொழில் தொடங்க சிறந்த சூழல் உள்ளதற்கு சான்று. எல்லா துறைகளிலும் திறமையான பணியாளர்களை தமிழகம் கொண்டுள்ளது. இன்றும், நாளையும் இந்த மாநாட்டில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் சிறப்பு அமர்வுகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More