Mnadu News

பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை: டிரம்ப் ரூ.41 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு.

அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் இ.ஜீன் கரோல் இந்த விவகாரம் குறித்து, டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கின் இறுதி விசாரணையில் டிரம்ப் 5 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 41 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கையாளர் ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கும், அவரை அவமதிப்பு செய்ததற்கும் டிரம்ப் பொறுப்பேற்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.ஆயினும் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற எழுத்தாளரின் குற்றச்சாட்டை மன்ஹாட்டன் நடுவர் மன்ற நீதிபதி நிராகரித்தார். இந்த தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த டிரம்ப் தமக்கு நேர்ந்த அவமானம் என்று கூறினார்.

Share this post with your friends