Mnadu News

பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்: முப்படை தலைமைத் தளபதி நம்பிக்கை.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனில் சவுகான், “ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 84 ஆயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.அதன் காரணமாக, அடுத்த ஆண்டுக்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி இந்தியா, உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும்.அதே சமயம், நமக்கான தளவாட உற்பத்தியை நாமே தயாரிப்பதைத் தாண்டி, ஏற்றுமதியையும் அதிகரித்து வருகிறோம்.இதனால், பாதுகாப்புக்கான தளவாட உற்பத்தித் துறை மிகப் பெரிய வளர்ச்சி காணும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends