கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் நீடிக்கிறது.,சில நாட்களுக்கு முன்னர், ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையான கக்கோவ்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அப்பகுதி வெள்ளக்காடாக மாறியது. இந்த தாக்குதல் தொடர்பாக இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டின.,இந்நிலையில், செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த சர்வதேச பொருளாதார கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசியுள்ள ரஷ்ய அதிபர் புடின்,முதல் கட்டமாக அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இப்போதைக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான அவசியம் இல்லை என்று கருதுகிறேன். ரஷ்யாவின் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்போது மட்டுமே இது பயன்படுத்தப்படும்.,இருப்பினும் பெலாரஸ் நாட்டிற்கு முதல்கட்டமாக அணு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளோம். முழுமையாக இந்த கோடை முடிவதற்குள் அனுப்பி வைப்போம். பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, மேற்குலகிற்கு ஒரு எச்சரிக்கை. என்று பேசி உள்ளார்.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று...
Read More