ரஜினி, விஜய், அஜித், சூரியா, விக்ரம் என தமிழ் சினிமாவின் ஆதர்ச கதாநாயகி திரிஷா. 20 வருடங்களுக்கு மேலாக அதே இடத்தில் பெரும் ஃபேன் படையோடு வெற்றி நடை போட்டு வருகிறார் நடிகை திரிஷா.
சமீப காலங்களில் திரிஷாவுக்கு சொல்லிக் கொள்ளும் படியான படங்கள் எதுவும் போகாததால் அவரின் மார்கெட் இறங்குமுகமாகவே இருந்தது. ஆனாலும், தொடர்ந்து அவருக்கு படங்கள் வந்த வண்ணம் இருந்தன.
பொன்னியின் செல்வன் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் திரிஷாவின் மார்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது அவர் 4 கோடிகளை சம்பளமாக கேட்கிறாராம்.
அதோடு, திரிஷா லீட் ரோலில் நடித்த ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்கள் விரைவில் வெளியிட திரிஷா சரியான நகர்வுகளை செய்து வருகிறார்.