முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக, மெரினாவில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கான கருத்து கேட்புக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று, மெரினாவில் பேனா சின்னம் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் சீமான் வழங்கினார். அவரது பேச்சுக்கு கூட்டத்தில் எதிர்ப்பு எழுந்ததால், கூட்டத்திலிருந்து வெளியேறி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மெரினாவில் உள்ள கடலில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாற்றுக் கருத்து சொன்னால் கூச்சல், குழப்பம் செய்கிறார்கள்.
நினைவுச் சின்னம் வைக்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் கடலுக்குள் வைக்கக் கூடாது. கருணாநிதி நினைவாக கடலில் பேனா சின்னத்தை வைத்தால், மீனவர்களுக்கும் பவளப்பாறைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்
அரசுப் பள்ளிகளை சீரமைக்க தமிழக அரசிடம் பணமில்லை, ஆனால் பேனா சின்னம் அமைக்க நிதியிருக்கிறதா? என்றும் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதோடு;, தனது எதிர்ப்பை மீறி, மெரினாவில் பேனா சின்னம் வைத்தால் அதனை உடைப்பேன் என்றும் கூறினார்.
நினைவுச் சின்னத்தை எதிர்க்கவில்லை. ஆனால் கடலில் எதற்கு நினைவுச்சின்னம் என்றுதான் கேட்கிறேன் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More