Mnadu News

பேனா நினைவுச் சின்னம்: ஜூலை 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நினைவிடம் மெரினாவில் அண்ணா சமாதி அருகே அமைந்துள்ளது. கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் சென்னை மெரினா கடல் பகுதியில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர் நல்லத்தம்பி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு ஜூலை 3-ஆம் தேதி நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதன்சு துலியா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends