முன்னாள் முதல் அமைச்சர்; கருணாநிதியின் உடலானது, அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இங்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் தமிழக அரசால் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம், வளைவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
நினைவுச் சின்னம் மொத்தம் 8,551.13 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.81 கோடியில் நிறுவப்படுகிறது. அதில், பேனாவுக்கான நிலைமேடை 2,263.08 ச.மீ. பரப்பளவிலும்; நினைவுச் சின்னத்துக்குச் செல்வதற்கான கடலுக்கு மேல் அமைக்கப்படும் நடைபாதை 2,073.01 ச.மீ. பரப்பளவிலும்; கடல், நிலத்தின் மேல் அமைக்கப்படும் வலைப்பாலம் 1,856 ச.மீ. பரப்பளவிலும்; கடற்கரையில் அமைக்கப்படும் நடைபாதை 1,610.60 ச.மீ. பரப்பளவிலும்; நினைவுச் சின்னத்திலிருந்து பாலத்துக்குச் செல்லும் நடைபாதை 748.44 ச.மீ. பரப்பளவிலும் அமைக்கப்பட வேண்டும். இதற்காக கடலில் 6 மீட்டர் ஆழம் இருக்க வேண்டும். அதுபோல கடல் மட்டத்திலிருந்து 6 மீ. உயரத்துக்கு மேல் நினைவுச் சின்னம் அமைய வேண்டும்.
கடற்கரையிலிருந்து 360 மீ. தொலைவில் அமையவுள்ள பேனா சின்னத்தின் உயரம் 42 மீ. அதைச் சுற்றி தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளன. நினைவுச் சின்னத்தை நோக்கி அமைக்கப்படவுள்ள பாலம், தரைப் பகுதியில் 290 மீ. நீளத்திலும், கடலுக்கு மேல் 6 மீ. உயரத்தில் 360 மீ. நீளத்திலும் அமைக்கப்படும். ஆக மொத்தம் 650 மீ. நீளம் கொண்ட அந்த பாலத்தின் அகலம் 7 மீட்டராகும். அதில் 3 மீ. கண்ணாடியாலான தளமாகும்.இந்த சூழ்நிலையில், கடற்கரைப் பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வதால் கடல் வளங்கள் பாதிக்கப்படும், ஆமைகள் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்று கூறி, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More