பேராசிரியர் அன்பழகனின் 3ஆம் ஆண்டு நினைவுநாளான அனுசரிக்கப்படுகிறது.பேராசிரியர் அன்பழகன் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்ட காலங்களில் அவர் செயல்படுத்திய பல திட்டங்கள் இன்றும் நினைவுகூரத்தக்கவை. சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. உயர்கல்வியில் தமிழைப் பயிற்றுமொழியாக்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. இவையெல்லாம் பேராசிரியர் க.அன்பழகன் தமிழக அரசின் கல்வித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளிகளில் கணினிப் பாடம் தொடங்கப்பட்டது முதல் உயர்கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாக்குவது வரை அவர் முன்னெடுத்து செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம். இந்த நிலையில்பேராசிரியர் அன்பழகனின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , வாழ்நாளெல்லாம் கொள்கை உறுதியோடு, தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் காட்டிய பாதையில், முத்தமிழறிஞர் கலைஞருக்கு உறுதுணையாக இனமானம் காக்க அயராது பாடுபட்ட இனமானப் பேராசிரியர் அவர்களின் நினைவுநாளில் அவரைப் போற்றுகிறேன். அவரது வாழ்வு ஒவ்வொருவரும் பயில வேண்டிய கொள்கை வகுப்பு என தெரிவித்துள்ளார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More