Mnadu News

பேரிடர் மேலாண்மைத் திட்டங்கள்: ரூ.8 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கீடு: அமித்ஷா தகவல்.

பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில், மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்கள், மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசியுள்ள அமித்ஷா வெள்ள அபாயத்தைக் குறைக்க மும்பை, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத் மற்றும் புனே ஆகிய ஏழு பெருநகரங்களுக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 825 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய நிலச்சரிவு அபாயக் குறைப்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை மாநில அரசுகள் தயாரிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு 8 ஆயிரம் ரூபாய் கோடியை ஒதுக்கி இருக்கிறது. 3 முக்கிய திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்படுகிறது. மாநில தீ அணைப்புத் துறையின் சேவைகளை விரிவுபடுத்தவும், நவீனப்படுத்தவும் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. என்று பேசி உள்ளார்.

Share this post with your friends