வடகிழக்கு மாநிலங்களில், பைனாகுலரில் வைத்து பார்த்தாலும் பார்க்க முடியாத அளவிற்கு காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டது என மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா கூறியுள்ளார்.கர்நாடக மாநிலம் பிடார் பகுதியில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டுள்ளது. அங்கு பைனாகுலரை வைத்தும் அவர்களை தேட முடியாது.வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ., நுழைய முடியாது எனக்கூறினர். ஆனால், அங்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைப்பதுடன், தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலங்கள், குஜராத், உ.பி., அல்லது கர்நாடகா ஆகட்டும், பிரதமர் மோடியின் மேஜிக் அங்கு வேலை செய்கிறது. ராகுல் தலைமையில் காங்கிரஸ் வீழ்த்தி அடைந்து வருகிறது. இதனால், அவர்களும், ஆம் ஆத்மியும் மோடிக்கு எதிராக கோஷம் போட்டு வருகின்றனர். மோடி நீண்ட காலம் வாழ வேண்டும் என மக்கள் பிரார்த்தனை செய்து வருவதால், கடவுள் உங்களின் கோஷங்களை கேட்க மாட்டார். என்று அமித்ஷா பேசினார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More