அரபிக் கடலில் மையம் கொண்டிருந்தது ‘பைபோர்ஜாய்’ புயல். இந்த புயல் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக மாறியது. இப்புயல் ஜூன் 15-ஆம் தேதியன்று குஜராத்- பாகிஸ்தானின் கராச்சியை ஒட்டி கரையை கடக்க உள்ளது.பைபோர்ஜாய்’ புயல் எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில், புயல் கரையை கடக்கும் போது பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More