பொங்கல் பண்டிகை 2023 ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு ரயில் முன்பதிவு குறித்த தகவலை தெற்கு ரயில்வே அறிவித்தது.அதையடுத்து அரசு விரைவு பேருந்துகளில் 300 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லக்கூடிய அரசு பேருந்துகளுக்கு 30 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில் ஜனவரி மாதம் 12-ஆம் தேதி பயணம் செய்வதற்கு நேற்று முன்பதிவு ஆரம்பமானது. இந்நிலையில் 13 ஆம் தேதி பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு 2 நாள்களுக்கு முன்னதாக சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More