Mnadu News

பொது சிவில் சட்டத்தை சட்ட ஆணையம் மறுபரிசீலனை செய்வது ஏன்?: காங்கிரஸ் கேள்வி.

நாடு முழுமைக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று 22-வது சட்ட ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுளள் அறிக்கையில்,: “பொது சிவில் சட்டம் தொடர்பாக 21-வது சட்ட ஆணையம் ஆய்வு மேற்கொண்டு, சட்ட ஆணையம் தனது முந்தைய அறிக்கையில், பொது சிவில் சட்டம் தேவையற்றது மற்றும் தற்போதைய நிலையில் விரும்பத்தக்கது அல்ல என்பதால், பாரபட்சமான சட்டங்களை இந்த ஆணையம் கையாள்கிறது. வேறுபாடுகளை அங்கீகரிப்பதை நோக்கி பெரும்பாலான நாடுகள் நகர்கின்றன. வேறுபாடுகள் இருப்பு பாகுபாட்டைக் குறிக்காது. வலுவான ஜனநாயகத்தையே குறிக்கும்’ என்று கூறி இருந்தது”. ஆனால் தற்போத திடீர் என்று பொது சிவில் சட்டத்தை சட்ட ஆணையம் மறுபரிசீலனை செய்வது ஏன்? என்று அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More