தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், மேகாலயா முதல் அமைச்சருமான கான்ராட் சங்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், “வடகிழக்கு ஒரு தனித்தவமான கலாச்சாரம் மற்றும் சமூக அமைப்பைக் கொண்டது. நாங்கள் அப்படியே இருங்க விரும்புகிறோம். உதாரணமாக நாங்கள் தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுவே எங்களுக்கான பலமாகவும் கலாச்சாரமாகவும் இருந்து வருகிறது. தற்போது அதனை மாற்ற முடியாது. பன்முகத் தன்மையே நமது கலாச்சாரம்; அதுவே நமது பலம். தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டம் இந்திய சிந்தனைக்கு எதிரானது. என்றாலும் என்ன மாதிரியான மசோதா தக்கல் செய்யப்பட இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. அந்த வரைவின் உண்மையான விஷயங்களை பார்க்காமல் அது குறித்த விபரங்களைக் கூறுவது கடினம்”. என்று கூறி உள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More