Mnadu News

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு ஒழுக்கம் வேண்டாமா?: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கேள்வி.

செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் , “சட்ட நுணுக்கங்களுக்குள் சென்று இது குறித்துப் பேசுவதைவிட, பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு சில ஒழுக்கங்கள் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதுதான் கேள்வி. ஒருவர் மீது சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அது நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகு அந்த நபர் அமைச்சராக தொடருவதை நினைத்துப் பார்க்கவே முடியாது. இந்த விவகாரத்தில் சட்டம் என்ன சொல்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், உங்கள் மீது சந்தேகம் எழுகிறது என்றால் நீங்கள் முதலில் அதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More