Mnadu News

பொன்னியின் செல்வன் 2 படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை.

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் பிரமாண்டமாக உருவாக்கிய படம்தான் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த பொன்னியின் செல்வன் 2; திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடுவதைத் தடுக்க கோரி லைகா பட தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சௌந்தர், பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Share this post with your friends