Mnadu News

பொம்மை படத்தின் வசூல் இவ்வளவு தானா? 

யார் இந்த எஸ் ஜே சூரியா: 

இயக்குநர் எஸ் ஜே சூரியா தமது திரை பயணத்தை துவங்கும் போதே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் அஜித் மற்றும் விஜய்யை இயக்கி இரண்டு படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தன. ஆனால், அதன் பின்னர் சரியான கதை தேர்வு இல்லாமல் தானே ஹீரோவாக நடித்து பல தோல்விகளை கண்டார். இதில் பெருத்த நஷ்டத்தை அடைந்தார். 

நடிகர் எஸ் ஜே சூரியா: 

பெரும் நிஷ்டதுக்கு பிறகு நடிக்க துவங்கினார் ஓரளவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால், 2015 ஆம் ஆண்டு மீண்டும் தானே இயக்கி நடித்து “இசை” என்னும் படத்தை வெளியிட்டார், அவர் நம்பிய அப்படம் படுதோல்வியை சந்தித்தது. தற்போது நடிப்பில் படு பிஸியாக பெரிய சம்பளத்தில் நடித்து வரும் எஸ் ஜே சூரியா நடிப்பில் இறவாக்காலம், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள்X, கேம் சேஞ்சர் போன்ற படங்கள் வெளியாக உள்ளன. 

பொம்மை படம் வெளியீடு : 

அண்மையில் எஸ். ஜே சூர்யா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே போல இந்த படத்தின் மூலம் சுமார் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் எஸ் ஜே சூரியா தயாரிப்பாளர் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

வசூல் நிலவரம் : 

“பொம்மை” திரைப்படம் கடந்த 13 நாட்களில் ₹3.50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் மேலும் பன்மடங்கு உயர வாய்ப்பு குறைவு என திரை அரங்கு வட்டாரங்கள் கூறுகின்றன. 

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More