பொதுவாகவே ராதாமோகன் இயக்கத்தில் ஒரு படம் வருகிறது என்றாலே அது முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தான் அப்படத்தின் கதை இருக்கும். அப்படி, வெகு வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்துள்ளது “பொம்மை”.

பொம்மை கதைக்களம் என்ன ?
ஒரு பொம்மை ஃபேக்டரியில் பொம்மைக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. அப்படி வேலை செய்து கொண்டிருக்கும்போது ஒரு நாள் ஒரு பொம்மைக்கு அவர் பெயிண்ட் அடிக்கப் போகும்போது அது தன்னுடைய பழைய பள்ளி காதலியான பிரியா பவானி சங்கர் அவர்களை நினைவூட்டுகிறது. அந்த நொடியிலிருந்து அவர் அந்த பொம்மையை பள்ளி பருவ காதலியாக நினைத்து காதலிக்கிறார்.

ஒரு வேலை காரணமாக வேறு ஒரு ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது அந்த கடையில் அந்த பொம்மை விற்பனையாகி விடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் ஒரு கொலையாளியாக மாறுகிறார். அதன் பிறகு அந்த பொம்மை வேறு ஒரு கடையில் இருப்பதை பார்த்து அந்த கடையில் வேலைக்கு சேர்ந்து தன்னுடைய காதலை தொடர்கிறார். இவருடைய வாழ்க்கை பொம்மை காதலியுடன் சந்தோஷமாக சென்றதா? அல்லது போலீஸ் இவர் செய்த கொலைகளுக்காக இவரை கைது செய்ததா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

நடிகர்களின் பங்களிப்பு:
வழக்கம் போல எஸ் ஜே சூரியா நடிப்பில் பின்னிப் பிடல் எடுத்துள்ளார். அதே போல பிரியா பவானி ஷங்கர், சாந்தினி போன்றவர்கள் தங்கள் ரோல்களில் சரியாக பொருந்தி நடித்து உள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையே படத்தை தாங்கி பிடிக்கிறது.

படம் ஜெய்ததா?
ஆனால், படத்தின் முதல் பாதி போல இரண்டாவது பாதி அமையாமல் போனதால் படத்தில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதனால் கலவையான விமர்சனங்களை இப்படம் முதல் நாளில் பெற்றுள்ளது.
