நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நாளை தொடங்கி பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றவிருக்கிறார். அவரது உரையைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படவுள்ளது. நாளைய தினம் 11 மணியளவில் நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த பொருளாதார ஆய்வறிக்கையானது இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி ஆனந்த நாகேஸ்வரன் அவர்களால் நாளை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின் போது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கை என்பது நாட்டின் பொருளாதார நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை (ரிப்போர்ட் கார்டு). இது மத்திய நிதியமைச்சரால் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நாட்டின் பொருளாதார நிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை இந்த பொருளாதார ஆய்வறிக்கை விரிவாகக் கொண்டிருக்கும். பொருளாதார ஆய்வு, தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த துறைசார் கண்ணோட்டங்கள், கருத்துகளை கொண்டிருக்கும். 2023-24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், பிப்ரவரி 1-இல் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுவார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More