- பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை 5 மணியளவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
- பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்ற கார்த்திகேயனை ஆதரித்து பேசுகிறார்.
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை 5 மணியளவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்ற கார்த்திகேயனை ஆதரித்து பேசுகிறார்.
இதனையொட்டி அங்கு பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்சியினர், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை வசதி உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் அ.தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.