ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதி, போகர் ஜெயந்தி விழா, பழநியில் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் ஜெயந்தி விழாவை நடத்த, ஹிந்து அறநிலையத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.இந்நிலையில், புலிப்பாணி பாத்திரசாமி மடம் சார்பில் போகர் ஜெயந்தி விழா நடத்த அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன், பழநியில் வரும் 18 ஆம் தேதி போகர் ஜெயந்தி நடத்தவும்,மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மனுக்கு வழக்கம் போல் அபிஷேகம் நடத்தவும் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தார்.

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...
Read More