கடந்த நவம்பர் நடந்த நேர்காணல் ஒன்றில் போப் பிரான்சிஸ் ரஷ்யா – உக்ரைன் போர் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, “ரஷ்ய வீரர்கள் சிறுபான்மையினர், உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இவ்வாறு தாக்குதல் நடத்தும் வீரர்கள் எல்லாம் நிச்சயம் ரஷ்யாவின் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் அல்ல.. மாறாக இவர்கள் எல்லாம் அங்கு உள்ள செச்சென்ஸ், புரியாட்ஸ் போன்ற இனத்தை சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்திருந்தார்.
போப்பின் கருத்திற்கு ரஷ்யா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வாட்டிகனின் செய்தி தொடர்பாளர் புரூனி வெளியிட்ட அறிவிப்பில், “நவம்பர் மாதம் நேர்காணல் ஒன்றில் போப் பிரான்சிஸ் பேசும்போது உக்ரைனில் சிறுபான்மையினர் மீதும் மக்கள் மீதும் ரஷ்ய வீரர்கள் நடத்திய தாக்குதலை விமர்சித்தார். இதற்காக தற்போது வாடிகன் மன்னிப்பு கேட்டு கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதைத் தொடர்ந்து போப் பிரான்சிஸ், “கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ் செலவுகளை குறைத்து உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More