Mnadu News

போராடும் மல்யுத்த வீரர்கள்: காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் சந்தித்து அதரவு.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதையடுத்து இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர், பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதோடு,,பிரிஜ் பூஷனை கைது செய்யும்படி வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள், வீராகங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களை பல்வேறு கட்சித் தலைவர்கள் சந்தித்து தங்களது ஆதரைவத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களை காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் சந்தித்து அதரவு அளித்துள்ளார்.

Share this post with your friends