சீரியல் கில்லர் கதைகள்:
அந்த காலம் முதல் இந்த காலம் வரை எத்தனையோ விதமான சீரியல் கில்லர்
கதைகளை தமிழ் சினிமா கண்டுள்ளது.
அப்படி கடந்த வருடங்களில் ரசிகர்களை பதற வைத்து பிளாக் பஸ்டர் வெற்றியை பதிவு செய்த படம் “ராட்சசன்”. என்ன இருக்க போகிறது இந்த படத்தில் என எண்ணி வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்தை வைத்தார் இயக்குநர் “ராம் குமார்”. தற்பொழுது அதே பாணியில் ஒரு திகைப்பூட்டும் திரில்லர் திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது.

போர் தொழில் :
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், சரத்பாபு ஆகியோர் நடிப்பில் வெளியாகி முற்றிலும் பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது “போர் தொழில்”. மூன்று நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாக இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

கதைக்களம் :
தொடர்ச்சியாக கொலைகள் அரங்கேறி வருகின்றன, அதுவும் பக்காவாக நீட்டாக கொலைகளை கொலையாளி அரங்கேற்றி வருகிறான். அதை கண்டுபிடிக்கும் பணியில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் இறங்குகிறார்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து கொலையாளியை கண்டு பிடித்தார்களா? கொலைக்கான அவனின் நோக்கம் என்ன என்பது தான் மீதிக்கதை.

கொட்டும் வசூல் :
இதுவரை படம் வெளியான ஐந்து நாட்களில் ₹6 கோடிகளை குவித்து உள்ளது. படத்துக்கு நாளுக்கு நாள் நல்ல விமர்சனங்கள் வருவதால் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக திரை அரங்க உரிமையாளர்கள் கணித்துள்ளனர்.
