Mnadu News

போலந்தில் விழுந்த ஏவுகணை உக்ரைனை சேர்ந்தது: விசாரணையில் தகவல்.

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வருகின்றது. நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் உறுப்பினராக இணையவில்லை என்றாலும் நேட்டோவால் உதவிகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது நேற்று இரவு நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ரஷியப் படையினர் தீவிர தாக்குதலை மேற்கொண்டனர். இதில், உக்ரைன் – போலந்து எல்லையில் போலந்து நாட்டின் பகுதியில் இரண்டு ரஷிய ஏவுகணைகள் விழுந்ததாகவும், இதில் இரண்டு போலந்து மக்கள் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போலந்து மீது விழுந்த ஏவுகணைகள் ரஷியாவை சேர்ந்தது என்று அந்நாடு குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில் ரஷியா மறுத்தது.
நேட்டோ கூட்டமைப்பின் கீழ் இருக்கும் ஒரு நாட்டின் மீது பிற நாடுகள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் ‘நேட்டோ சட்டப் பிரிவு 5-ஐ’ பயன்படுத்தி தாக்குதல் நடத்திய நாட்டின் மீது நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் தாக்குதல் நடத்தலாம் என்ற விதிமுறை உள்ளது.
இதற்கிடையே, போலந்து அதிபருடன் தொடர்பு கொண்டு பேசிய ஜோ பைடன், அனைத்து உதவிகளும் நேட்டோ தரப்பில் வழங்கப்படும் எனக் கூறியதுடன், நேட்டோ கூட்டத்திலும் ஆலோசித்தார்.
இந்நிலையில், முதல்கட்ட விசாரணை மேற்கொண்டதில் போலந்தில் விழுந்த ஏவுகணைகள், ரஷிய தாக்குதலை தடுக்க உக்ரைன் படையினர் பயன்படுத்தியது எனத் தெரிய வந்துள்ளது.
தற்போது நேட்டோ அமைப்பு உக்ரைன் மீது நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

Share this post with your friends