Mnadu News

போலீசார் முன்பு பிளேடால் அறுத்துக்கொண்ட ரவுடி..!

புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட சின்ன கொசப்பாளையம் பகுதியை சேர்ந்த 24 வயதான ரிஷி என்பவர் மீது இரண்டு கொலை வழக்கு மற்றும் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு நிலுவையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து தீபாவளி அன்று ரிஷி கத்தியை வைத்து கொண்டு பொது மக்களை அச்சுறுத்தியாக போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் ரிஷியை தேடி வந்தனர். இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் அருகே சுற்றி திரிந்த ரிஷியை விசாரணை செய்ய போலீசார் அழைத்த போது அவர் மறைத்து வைத்திருந்த பிளேடால் கை மற்றும் கழுத்து பகுதியில் கிழித்துக்கொண்டார். அப்போது அங்கு வந்த ரிஷியின் சகோதரர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்ப்படுத்தியது..

Share this post with your friends