தூத்துக்குடி மாவட்டம் புங்கவர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் கருத்து வேறுபாட்டால் முதல் மனைவியை விட்டு பிரிந்து இரண்டாவது மனைவி லதா உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 15 வயதான தனது மகள் வீட்டில் இருக்கும்போதெல்லாம் தந்தையான ரவி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த சிறுமி தனது தாய் லதாவிடம் தனக்கு அப்பா பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், வெளியே சொன்னால் அனைவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து லதா கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு போக்சோ சட்டத்தின் கீழ் ரவியை கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More